செல்போன் திருடனைப் பிடிக்க ஓடும் ரெயிலில் இருந்து குதித்த பெண்


செல்போன் திருடனைப் பிடிக்க ஓடும் ரெயிலில் இருந்து குதித்த பெண்
x

ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் திருடனை தேடி வருகின்றனர்.

கொல்கத்தா,

மேற்குவங்காள மாநிலம் பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது பணியை முடித்துக் கொண்டு வீட்டிற்கு செல்வதற்காக கேனிங்-சீல்டா ரெயிலில் ஏறினார்.

அப்போது அங்கிருந்த ஒரு திருடன், அந்தப்பெண்ணின் செல்போனை பறித்துக் கொண்டு ரெயிலில் இருந்து குதித்து தப்பியோடினான். உடனே சுதாரித்துக் கொண்ட அந்தப்பெண் தப்பியோடிய செல்போன் திருடனைப் பிடிக்க ஓடும் ரெயிலில் இருந்து கீழே குதித்தார். கீழே குதித்ததில் அவர் படுகாயம் அடைந்தார்.

இந்த சம்பவம் பற்றி தகவல் தெரிந்த ரெயில்வே போலீசார் விரைந்து வந்து அந்தப்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் திருடனை தேடி வருகின்றனர்.


Next Story
  • chat