மராட்டியத்தில் 150 அடி பள்ளத்தில் பஸ் பாய்ந்தது பெண் பலி
மராட்டிய மாநிலத்தில் 150 அடி பள்ளத்தில் பஸ் பாய்ந்த விபத்தில் சிக்கி பெண் பலியானார்.
மும்பை,
மராட்டிய மாநிலம் நாசிக் பகுதியில் இருந்து புல்தானா மாவட்டம் காம்காவுக்கு மாநில அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பஸ் ஒன்று நேற்று அதிகாலை புறப்பட்டது.
அதிகாலை 5.45 மணி அளவில் நாசிக் மாவட்டம் சப்தசுருங்கி கார்க் மலைப்பகுதியில் சென்று கொண்டு இருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு 150 அடி பள்ளத்தில் பாய்ந்தது. இந்த பயங்கர விபத்தில் பெண் பயணி ஒருவர் பலியானார். மேலும் 22 பயணிகள் காயம் அடைந்தனர்.
அதிர்ஷ்டவசமாக பஸ் பள்ளத்தாக்கில் பாய்ந்தபோது பாதி வழியில் புதர்கள் மற்றும் சகதியில் சிக்கி அந்தர் பல்டி அடிக்காமல் நின்று விட்டது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
Related Tags :
Next Story