மராட்டியம்: சந்திராபூரில் புலி தாக்கியதில் பெண் உயிரிழப்பு!
மராட்டியத்தில் புலி தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது கணவரும் தாக்குதலுக்கு பிறகு காணாமல் போயுள்ளார்.
சந்திராபூர்,
மகாராட்டிய மாநிலம் சந்திராபூர் மாவட்டத்தில் 55 வயதுடைய பெண் ஒருவர் புலியால் தாக்கியதில் உயிரிழந்தார். அதே நேரத்தில் அவரது கணவர் புலியின் தாக்குதலுக்குப் பிறகு மாயமானதாக வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நாக்பித் மலைத்தொடரில் அமைந்துள்ள தோட்டத்தில் கணவன், மனைவி இருவரும் வேலை செய்துகொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்ததாக தலைமை வனப் பாதுகாப்பு அதிகாரி பிரகாஷ் லோன்கர் தெரிவித்தார்.
காணாமல் போன நபரை தேடும் பணியின் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story