மூன்று மனைவிகள் நான்காவது ஊர்வி....! கொலையில் முடிந்த கள்ளக்காதல்


மூன்று மனைவிகள் நான்காவது ஊர்வி....! கொலையில் முடிந்த கள்ளக்காதல்
x

இளம் பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் கண்காணிப்பு கேமரா எதுவும் இல்லை. இதனால் கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பதை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது.

மும்பை

மராட்டிய மாநிலம் நவிமும்பையை அடுத்த தாம்னி கிராமத்தில் கடந்த 17 ந்தேதி காதி ஆற்றில் கடந்த சில நாள்களுக்கு முன்பு, 27 வயது மதிக்க தக்க பெண் ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ததில், பெண் கழுத்தை நெரித்துக் கொலை செய்து ஆற்றில் தூக்கி வீசப்பட்டது தெரியவந்தது.

நவிமும்பை குற்றப்பிரிவு போலீசார் இது குறித்து வழக்கு பதிவுசெய்து விசாரித்து வந்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

இளம் பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் கண்காணிப்பு கேமரா எதுவும் இல்லை. இதனால் கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பதை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது.

அதையடுத்து போலீசார் நவிமும்பையில் காணாமல்போன பெண்கள் பற்றிய விவரங்களை சேகரித்தனர். ஆனால் அதில் குறிப்பிடத்தக்க எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. உதவி இன்ஸ்பெக்டர் பிரவின் தலைமையிலான குழு இது குறித்து விசாரணை நடத்த தனிக்குழு அமைத்தது.

கொலைசெய்யப்பட்ட பெண் காலில் செருப்பு அணிந்திருந்தார். அந்த செருப்பில் கடை ஒன்றின் பெயர் இருந்தது. குறிப்பிடப்பட்ட செருப்பு கடையின் அனைத்து கிளைகளுக்கும் சென்று கொலைசெய்யப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை காட்டி போலீசார் விசாரணை நடத்தினார்கள். வாஷியில் ஒரு கடையில் அந்தப் பெண் செருப்பு வாங்க வந்ததாக சேல்ஸ்மேன் ஒருவர் தெரிவித்தார். உடனே அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது அந்தப் பெண்ணுடன் உடல் திடகாத்தமான ஒருவரும் வந்திருந்தது தெரியவந்தது.

உடனே அந்தப் பெண்ணின் பெயர் ஊர்வி வைஷ்னவ் (27) என்று அடையாளம் கண்டுபிடிக்கபட்டது. ராஜஸ்தானின் பூண்டியை சேர்ந்த ஊர்வி கடந்த 6 முதல் 7 ஆண்டுகளாக மும்பையில் உள்ள ஒரு பார் ஒன்றில் பணியாளராக பணிபுரிந்து வந்தார்.

அவர் வேலை செய்த இடத்துக்குச் சென்று அவர் குறித்து விசாரித்தபோது ஊர்வி வேலைக்கு வரவில்லை என்று தெரியவந்தது. அவர் பார் ஒன்றில் வேலை செய்து வந்தார். அவருடன் இருந்த நபர் ரியாஸ் கான் என்று அடையாளம் காணப்பட்டது.

தேவ்னார் பகுதியைச் சேர்ந்த அந்த நபர் ஜிம் பயிற்சியாளராக இருக்கிறார். அதோடு அவருக்கு ஏற்கெனவே மூன்று மனைவிகள் இருக்கின்றனர். புதிதாக பீர் பார் வந்தபோது ரியாஸ் கானுக்கு, ஊர்வியுடன் திருமணம் மீறிய கள்ள உறவு ஏற்பட்டது. ஊர்வசி தன்னை திருமணம் செய்யும்படி ரியாசை கட்டாயப்படுத்தினார்.

ஆனால் ஏற்கெனவே மூன்று மனைவிகள் இருக்கும் நிலையில், மீண்டும் திருமணம் செய்ய முடியாது என்று தெரிவித்திருக்கிறார். இதனால் ஊர்வி, `வீட்டில் வந்து பிரச்சினை செய்துவிடுவேன். போலீசில் புகார் செய்வேன்' என்று மிரட்டியிருக்கிறார். உடனே ஊர்வியை கொலைசெய்ய திட்டம் தீட்டினார் ரியாஸ் கான். இதற்கான தன் நண்பன் இம்ரான் ஷேக் உதவியை நாடி உள்ளார்.

இம்ரான் ஷேக் ரியாஸ் கானுக்கு பணம் கொடுத்திருந்தான். அந்தப் பணம் வேண்டுமானால் பெண் ஒருவரை கொலைசெய்ய தனக்கு உதவவேண்டும் என்று ரியாஸ் கான் இம்ரான் ஷேக்கிடம் கேட்டுக்கொண்டான். இம்ரானும் அதற்கு ஒப்புக்கொண்டான். உடனே ரியாஸ் ஷேக் ஊர்வசியை கடந்த 13-ம் தேதி தன் காரில் அழைத்துக்கொண்டு ஷில்பாடா நோக்கிச் சென்றான்.

ஏற்கெனவே ஊர்வியை கொலைசெய்ய தயார் செய்து வைத்திருந்த இம்ரான் ஷேக்கை செல்லும் வழியில், காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டான். காரில் செல்லும் வழியிலேயே ஊர்வசியை கயிற்றால் கழுத்தை நெரித்துக்

கொலை செய்திருக்கின்றனர். பின்னர் உடலை ஆற்றில் போட்டு சென்றிருக்கின்றனர்''


Next Story