புனேவில் ஆண் நண்பனை தாக்கி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கும்பல்

File image
பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க 10 போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக புனே காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
புனே,
மராட்டிய மாநிலம் புனேவில் நேற்று நள்ளிரவு 11 மணியளவில் 21 வயது பெண்ணும் அவரது ஆண் நண்பரும் போப்தேவ் கார் பகுதிக்கு சென்றிருந்தனர். அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் அந்த ஆண் நண்பனை தாக்கிவிட்டு பெண்ணை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு இழுத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி போலீசில் புகார் அளித்துள்ளார். பெண்ணின் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க 10 போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக புனே காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story






