ரூ.1,000 கடனுக்காக தொழிலாளி அடித்து கொலை; நண்பர் கைது
ரூ.1,000 கடனுக்காக தொழிலாளியை அடித்து கொன்ற நண்பர் கைது செய்யப்பட்டார்
சிக்கமகளூரு: சித்ரதுர்கா டவுன் கானபாவி பகுதியை சேர்ந்தவர் முகமது அலி (வயது 30). இவருடைய நண்பர் காதர் பாஷா. இவர்கள் இருவரும் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு காதர் பாஷாவிடம் முகமது அலி ரூ.1,000 கடன் வாங்கியிருந்தார். ஆனால் அந்த பணத்தை முகமது அலி திரும்ப கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் பணத்தை கேட்டு காதர் பாஷா தகராறு செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினமும் அவர்களுக்குள் இதுதொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த காதர் பாஷா, முகமது அலியை செங்கல்லால் சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த முகமது அலி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் சித்ரதுர்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து காதர் பாஷாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணையும் நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story