குழந்தை தொழிலாளா்கள் எதிர்ப்பு தினம் - ஒடிசாவின் பூரி கடற்கரையில் சிறப்பு மணல் சிற்பம்


குழந்தை தொழிலாளா்கள் எதிர்ப்பு தினம் - ஒடிசாவின் பூரி கடற்கரையில் சிறப்பு மணல் சிற்பம்
x
தினத்தந்தி 13 Jun 2022 2:22 AM GMT (Updated: 13 Jun 2022 2:24 AM GMT)

உலக குழந்தை தொழிலாளா்கள் எதிர்ப்பு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது.

ஒடிசா,

உலகம் முழுவதும் ஜூன் 12-ந் தேதி குழந்தைத் தொழிலாளர்கள் ஒழிப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் வேலை உலகத்தை ஒழுங்குபடுத்தும் ஐக்கிய நாடுகளின் அமைப்பானது, 2002- ம் ஆண்டு குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினத்தை அறிமுகப்படுத்தியது.

ஐ.நா அமைப்பானது இந்த ஆண்டிற்கான குழந்தை தொழிலாளா்கள் எதிர்ப்பு தினத்திற்கான கருப்பொருளாக, "குழந்தைத் தொழிலாளர்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உலகளாவிய சமூகப் பாதுகாப்பு" என அறிவித்துள்ளது.

இந்த நிலையில், ஒடிசாவின் மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசாவின் பூரி கடற்கரையில் உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு சிறப்பு மணல் சிற்பத்தை உருவாக்கினாா்.


Next Story