முஸ்லிம் வீட்டில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு


முஸ்லிம் வீட்டில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு
x

முஸ்லிம் வீட்டில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடந்துள்ளது.

யாதகிரி: கர்நாடகத்தில் கடந்த மாதம் (ஆகஸ்டு) 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்துகள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்திவிட்டு, ஏரி, குளங்களில் கரைத்தனர். இந்த நிலையில், யாதகிரி மாவட்டம் அருகே முஸ்லிம் வீட்டில் விநாயகா் சிலை வைத்து வழிபாடு நடத்திய சம்பவம் நடந்துள்ளது. யாதகிரி மாவட்டம் சகாபுரா அருகே தோரணஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அப்துல் நபி. இவர், சொந்தமாக ஓட்டல் நடத்தி வருகிறார். இதையடுத்து, விநாயகர் சதுர்த்திக்காக தனது வீட்டில் விநாயகர் சிலையை வைத்து வழிபட்டு வருகிறார். அக்கம் பக்கத்தில் வசிக்கும் முஸ்லிம்களை அழைத்தும் அவர் விநாயகருக்கு பூஜை செய்து வருகிறார்.

இதுபற்றி முகமது நபி கூறுகையில், "எனது வீட்டில் கடந்த 4 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருகிறேன். ஒவ்வொரு ஆண்டும் எங்கள் வீட்டில் 5 நாட்கள் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்துவோம். பின்னர் பூஜை செய்து ஏரியில் கரைப்போம். முஸ்லிம் பண்டிகைகளை போன்று ஒவ்வொரு இந்து பண்டிகைகளையும் நானும், குடும்பத்தினரும் கொண்டாடி வருகிறோம், " என்றார்.


Next Story