ஜனாதிபதி தேர்தலில் யஷ்வந்த் சின்கா வெற்றி பெற வேண்டும்- சித்தராமையா பேட்டி
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாக்க ஜனாதிபதி தேர்தலில் யஷ்வந்த் சின்கா வெற்றி பெற வேண்டும் என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் விரைவில் முடிய உள்ளது. ஜனாதிபதி பதவி என்பதும் நாட்டின் மூத்த மற்றும் முதன்மை பதவியாகும். பா.ஜனதா அரசால் நடத்தப்படும் சட்டவிரோத ஆட்சிக்கு எதிராக காங்கிரஸ் கூட்டணி சார்பில் யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார். நமது கூட்டணி கட்சிகளில் மக்கள் பிரதிநிதிகள் உள்பட அனைவரும் ஒருசேர வாக்களித்து அவரை வெற்றி பெற செய்ய வேண்டும். அவர் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்க யஷ்வந்த் சின்கா ெவற்றி பெற வேண்டும். அவருக்கும் மதவாதத்துக்கு எதிராக இருக்கும் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story