தொண்டையில் சிக்கிய மாமிச துண்டு இளம் பெண் உயிரை பறித்தது


தொண்டையில் சிக்கிய மாமிச துண்டு இளம் பெண் உயிரை பறித்தது
x

கேரள மாநிலத்தில் தொண்டையில் சிக்கிய மாமிச துண்டு இளம் பெண் உயிரை பறித்தது.

பாலக்காடு:

மலப்புரம் அருகே சாப்பிடும்போது மாமிசத் துண்டு தொண்டையில் சிக்கியதால் மனைவி பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து கூறப்படுவது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மண் அருகே உள்ளது செத்தலூர். இங்கு வசிப்பவர் ஆஷிக். இவருடைய மனைவி பாத்திமா ஹானான் (22). திருமணத்துக்கு பின்பும் மனைவி இங்கு உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று தனது கணவனுடன் வீட்டிலிருந்து மதிய உணவுசாப்பிட்டுக் கொண்டு இருந்தார் பாத்திமா ஹானான்அப்போது அவருடைய தொண்டையில் ஒரு மாமிச துண்டு சிக்கிக்கொண்டது. இந்த துண்டு மூச்சுக்குழாயில் சிக்கியதால் மூச்சு விடக்கூட முடியாமல் தத்தளித்தார்.

உடனடியாக உறவினர்கள் பெருந்தல்மண் நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார்கள். அங்கு சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அவர் பரிதாபமாக இறந்து போனார். விவரமறிந்த செத்தலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story