குடகில் போலி மதுபானம் தயாரித்த வாலிபர் கைது


குடகில் போலி மதுபானம் தயாரித்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 2 Sep 2023 6:45 PM GMT (Updated: 2 Sep 2023 6:46 PM GMT)

குடகில் போலி மதுபானம் தயாரித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

குடகு:-

குடகில் சட்டவிரோதமாக போலி மதுபானங்கள் தயாரித்து கேரளாவிற்கு கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வந்தனர். மேலும் சந்தேகப்படும் மதுபானங்கள் தயாரிப்பு ஆலைகளில் சோதனை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று குடகு மாவட்டம் பாகமண்டலா போலீஸ் எல்லைக்குட்பட்ட தாவூர் பகுதியில் போலி மதுபானம் தயாரிக்கும் ஆலை செயல்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாகமண்டலா போலீசார் சம்பந்தப்பட்ட ஆலையில் சோதனை செய்தனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக போலி மதுபானங்கள் தயாரிக்கப்பட்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலி மதுபானம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் கேரள மாநிலத்தை சேர்ந்த ஹாசீம் (வயது 35) என்று தெரியவந்தது. வேலையின் காரணமாக குடகிற்கு வந்தவர், பின்னர் இங்கேயே தங்கிவிட்டார். அப்போது போலி மதுபானம் தயாரிக்கும் கும்பலுடன் பழக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து ஹாசீம் சொந்தமாக போலி மதுபானங்கள் தயாரிக்க தொடங்கியது தெரியவந்தது. இந்த போலி மதுபானங்களை குடகு மற்றும் கேரளத்தில் விற்பனை செய்து வந்துள்ளார்.

இது தொடர்பாக ஹாசீம்் கொடுத்த தகவலின் பேரில் மதுபானம் தயாரிக்க பயன்படுத்திய 60 லிட்டர் காஸ்டிக் கேரமல் என்ற திரவம் மற்றும் 2 ஆயிரம் காலி பாட்டில்கள் உள்பட பல்வேறு பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ஹாசீம் மீது பாகமண்டலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story