கத்தியால் குத்தி வாலிபர் கொலை; தந்தை கைது


கத்தியால் குத்தி வாலிபர் கொலை; தந்தை கைது
x

உப்பள்ளியில், மனநலம் பாதித்த வாலிபரை கத்தியால் குத்தி கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

உப்பள்ளி;

மனநலம் பாதித்த வாலிபர் கொலை

தார்வார் மாவட்டம் பழைய உப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சங்கர ராமகிருஷ்ணா. இவரது மகன் ஜெகதீஷ் சங்கர் (வயது 31). இவர் மனம் நலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இதனால் அவர், சங்கர ராமகிருஷ்ணாவிடமும், தாயிடமும் தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார். மேலும் வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தியுள்ளார்.

அதேபோல் நேற்றுமுன்தினமும் ஜெகதீஷ், பெற்றோரிடம் தகராறு செய்துள்ளார். மேலும் வீட்டில் இருந்த பொருட்களை வீசி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த சந்தர்ப்பத்தில் ஆத்திரமடைந்த சங்கர ராமகிருஷ்ணா வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மகன் என்றும் பாராமல் ஜெகதீசை சரமாாியாக குத்தியுள்ளார். இதில் பலத்த கத்திகுத்து காயமடைந்த ஜெகதீஷ் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

அவரை, அப்பகுதியினர் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஜெகதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

தந்தை கைது

இதுகுறித்து பழைய உப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெகதீசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் கத்தியால் குத்தி மகனை கொன்ற சங்கர ராமகிருஷ்ணாவை கைது செய்தனர். கைதான அவர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story