தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் கத்தியால் குத்தி வாலிபர் கொலை; 2 பேருக்கு வலைவீச்சு


தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் கத்தியால் குத்தி வாலிபர் கொலை; 2 பேருக்கு வலைவீச்சு
x

உப்பள்ளி அருகே தங்கையை காதலிப்பதாக கூறி பாலியல் ெதால்லை கொடுத்ததால் வாலிபரை கத்தியால் குத்திக் கொன்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

உப்பள்ளி;

பெண்ணுக்கு பாலியல் தொல்லை

தார்வார் மாவட்டம் உப்பள்ளி தாலுகா பழைய உப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர்(வயது 24). தொழிலாளி. இவர், அதேப்பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் சந்திரசேகர், இளம்பெண்ணிடம் தன்னுடைய காதலை கூற முடிவு செய்துள்ளார்.

அதன்படி வீட்டில் இருந்து அந்த பெண் கடைக்கு சென்றபோது பின்தொடர்ந்து சென்ற சந்திரசேகர் தனது காதலை தெரிவித்துள்ளார். ஆனால் இளம்பெண் காதலை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்திரசேகர், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் பயந்து போன பெண் வீட்டிற்கு ஓடிவந்து தன்னுடைய அண்ணன்களான கிரண் மற்றும் அபிஷேக் ஆகியோரிடம் நடந்த சம்பவத்தை கதறி அழுதபடி கூறியுள்ளார்.

வாலிபர் கொலை

இதைகேட்டு ஆத்திரமடைந்த 2 பேரும், சந்திரசேகருடன் தகராறு செய்து அவரை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் அங்கு வைத்து 2 பேரும், சந்திரசேகரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதைதொடர்ந்து மறைத்து வைத்திருந்த கத்தியால் சந்திரசேகரின் வயிற்றுப்பகுதியில் சரமாரியாக குத்தினர். இதில் பலத்த காயம் அடைந்த சந்திரசேகர் நிலைகுலைந்து கீழே விழுந்து உயிருக்கு போராடினார். இதற்கிடையே 2 பேரும் அங்கிருந்து தப்பியோடி சென்றுவிட்டனர்.

இதையறிந்த சந்திரசேகரின் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் நேற்று காலை சிகிச்சை பலனின்றி சந்திரசேகர் பரிதாபமாக உயிரிழந்தார்.

வலைவீச்சு

இதுபற்றிய புகாாின் பேரில் உப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கும், ஆஸ்பத்திரிக்கும் சென்று விசாரணை நடத்தினர். அதில் தங்கையை காதலிப்பதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்ததால் ஆத்திரத்தில் அவரது 2 அண்ணன்கள், சந்திரசேகரை கத்தியால் குத்தி கொன்றது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து உப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடி தலைமறைவான 2 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story