பேட்மிண்டன் போட்டி வெற்றிக்கு பின் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் எழுப்பிய இளைஞர்கள்


பேட்மிண்டன் போட்டி வெற்றிக்கு பின் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் எழுப்பிய இளைஞர்கள்
x

பீகாரில் பேட்மிண்டன் போட்டி வெற்றிக்கு பின் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷம் எழுப்பிய இளைஞர்களை கைது செய்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.


அர்ரா,


சமூக ஊடகங்களில் வெளிவந்த வைரலான வீடியோ ஒன்றில், இளைஞர்கள் சிலர் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷம் எழுப்பிய காட்சிகள் இடம் பெற்று இருந்தன. இதுபற்றிய விசாரணையில், பீகாரில் கோயில்வார் மற்றும் சண்டி என்ற இரு அணிகளுக்கு இடையே பேட்மிண்டன் போட்டி நடந்துள்ளது.

இதில், சண்டி அணி வெற்றி பெற்றுள்ளது. இதனை அணி வீரர்கள் கொண்டாடியுள்ளனர். இதன்பின்பு, சில இளைஞர்கள் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் எழுப்பியிருக்கின்றனர் என தெரிய வந்துள்ளது. இதனை சிலர் வீடியோவாக எடுத்து வலைதளத்தில் பரப்பியுள்ளனர்.

இதுபற்றி போஜ்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு சஞ்சய் குமார் சிங் தானாக முன்வந்து நடவடிக்கை எடுத்துள்ளார். உடனடியாக குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இந்த விவகாரம் பற்றி அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு, 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது என சஞ்சய் சிங் கூறியுள்ளார்.


Next Story