அக்னிபத் குறித்த தவறான தகவல்களை நம்ப வேண்டாம் : மத்திய மந்திாி மேக்வால்
'அக்னிபத்' குறித்த தவறான பிரச்சாரத்தை நம்ப வேண்டம் என மத்திய மந்திாி அரவிந்த் ராம் மேக்வால் தொிவித்து உள்ளாா்.
அகமதாபாத்,
ராணுவத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள புதிய ஆள்சேர்ப்பு முறையான 'அக்னிபத்' குறித்த தவறான பிரச்சாரத்தில் இளைஞர்கள் வீழ்ந்து விடக்கூடாது என மத்திய மந்திாி அரவிந்த் ராம் மேக்வால் தொிவித்து உள்ளாா்.
முப்படைகளில் இளைஞர்களை சேர்க்கும் அக்னிபத் என்ற திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தில் தேர்வாகும் இளைஞர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுவர்.
இதனிடையே, இந்த திட்டத்திற்கு வட மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. போராட்டங்கள் பல இடங்களில் வன்முறையாக மாறி ரெயில்களுக்கு தீ வைக்கப்படும் சம்பவங்களும் அரங்கேறியுள்ளது.
இந்த நிலையில், அக்னிபத்' திட்டத்தை வரவேற்பதாக மத்திய மந்திாி அரவிந்த் ராம் மேக்வால் தொிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் கூறுகையில், 'அக்னிபத்' திட்டம் நாட்டிற்கும், ராணுவத்திற்கும் பணியாற்ற ஆா்வமுள்ளவா்களுக்கு இது ஒரு "முக்கியமான திட்டம்" . தவறான தகவல்களால் இந்த திட்டத்திற்கு எதிராக சில இளைஞர்கள் எதிர்க்கிறார்கள் என்றும், அதில் விழ வேண்டாம் என்றும் அவா் தொிவித்தாா்.
'அக்னிபத்' திட்டம் தொடர்பாக சில கட்சிகள் தவறான பிரச்சாரம் செய்கின்றனா். அவா்களின் வலையில் இளைஞா்கள் விழக்கூடாது. இந்தத் திட்டத்தை நான் வரவேற்கிறேன்," என்று அவர் கூறினார்.
மேலும், இந்த திட்டத்தின் கீழ் பணியாற்றியவா்களில் 25 சதவீதம் பேர் மீண்டும் வழக்கமான ராணுவத்தில் பணியாற்ற உள்ளனா். 4 ஆண்டு சேவைகளுக்கு பிறகு ராணுவத்தை விட்டு வெளியேறுபவா்களுக்கு தொகுப்பு நிதி கிடைக்கும் என்றும், துணை ராணுவ படைகளில் அவா்களுக்கு பணிபுாிய வாய்ப்பு இருப்பதாக அவா் கூறினார்.