தீயணைப்பு துறைக்கு புதிதாக 1,222 பேர் நியமனம்;மந்திரி அரக ஞானேந்திரா தகவல்


தீயணைப்பு துறைக்கு புதிதாக 1,222 பேர் நியமனம்;மந்திரி அரக ஞானேந்திரா தகவல்
x

தீயணைப்பு துறைக்கு புதிதாக 1,222 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மந்திரி அரக ஞானேந்திரா கூறியுள்ளார்.

பெங்களூரு:

போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

தீயணைப்புத்துறைக்கு புதிதாக 1,222 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அதன்படி இதுவரை 603 பேருக்கு நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கும் விரைவாக பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். மாநிலத்தில் உள்ள அனைத்து தாலுகா மையங்களிலும் தீயணைப்பு நிலையத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவற்றுக்கு வீரர்களை நியமிக்கும் பணிகளுக்கு முன்னுரிமை அளித்துள்ளோம். தீயணைப்பு துறையில் 7 ஆயிரத்து 57 பணியிடங்கள் உள்ளன. அதில் கடந்த 2021-ம் ஆண்டு இறுதி வரை 2 ஆயிரத்து 627 காலியிடங்கள் உள்ளன. இந்த காலியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும். தீயணைப்பு நிலையங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் அவற்றுக்கு நவீன தீயணைப்பு உபகரணங்களும் வழங்கப்படும்.

இவ்வாறு அரக ஞானேந்திரா கூறினார்.


Next Story