கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

பெங்களூருவில் கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு:
பெங்களூரு பேடராயனபுரா போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 வாலிபர்களை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் விஜயநகர் அருகே அத்திகுப்பேயை சேர்ந்த அபிஷேக் (வயது 28), பாபுஜிநகரை சேர்ந்த அபி (26) என்று தெரிந்தது.
இவர்கள் 2 பேரும் குறைந்த விலைக்கு கஞ்சாவை வாங்கி தங்களுக்கு தெரிந்த நபர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. கைதான 2 பேரிடம் இருந்து 7 கிலோ 550 கிராம் கஞ்சா, செல்போன்கள், ரூ.800 பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 2 பேர்மீதும் பேடராயனபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





