சங்கிலி தொடர் விபத்தில் 8 வாகனங்கள் சேதம்


சங்கிலி தொடர் விபத்தில்  8 வாகனங்கள் சேதம்
x

பெங்களூருவில் சங்கிலி தொடர் விபத்தில் 8 வாகனங்கள் சேதமடைந்தன.

பெங்களூரு:

பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டை அருகே சுங்கச்சாவடி அமைந்துள்ளது. நேற்று காலையில் இந்த சுங்கச்சாவடிக்கு ஒரு சரக்கு ஆட்டோ வந்தது. அதைத்தொடர்ந்து கார்கள், லாரி என ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து வந்தன. இந்த நிலையில் அந்த சரக்கு ஆட்டோவை டிரைவர் திடீரென நிறுத்தினார்.

இதனால் அதன்பின்னால் வந்த வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இந்த சங்கிலித்தொடர் விபத்தில் சரக்கு ஆட்டோ, கார்கள், லாரி என மொத்தம் 8 வாகனங்கள் பலத்த சேதம் அடைந்தன. அந்த வாகனங்களில் பயணித்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

1 More update

Next Story