ஆப்பிரிக்காவை சேர்ந்தவருக்கு சின்னம்மை நோய் பாதிப்பு; குரங்கு அம்மை கிடையாது சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தகவல்


ஆப்பிரிக்காவை சேர்ந்தவருக்கு சின்னம்மை நோய் பாதிப்பு; குரங்கு அம்மை கிடையாது  சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தகவல்
x

ஆப்பிரிக்காவை சேர்ந்தவருக்கு சின்னம்மை நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.

பெங்களூரு:

அறிகுறிகள் தென்பட்டன

உலகில் பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. இந்த நோய் டெல்லி, தெலுங்கானா, கேரளா போன்ற மாநிலங்களில் பரவியுள்ளது. அந்த நோயால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நோய் பரவலை தடுக்க மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இந்த நிலையில் ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவில் இருந்து ஒருவர், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக கடந்த 4-ந் தேதி பெங்களூரு வந்தார்.

அவர் இங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே அவருக்கு குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டன. இதனால் அவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருக்குமோ என்ற அச்சம் எழுந்தது.

சின்னம்மை நோய்

இதையடுத்து அவரது ரத்த மாதிரிகள் சேரிக்கப்பட்டு பரிசோதனைக்காக புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த பரிசோதனை முடிவு வெளிவந்துள்ளது. அவருக்கு சின்னம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

எத்தியோப்பியாவில் இருந்து நடுத்தர வயது உடைய ஒருவர் இந்த மாதத்தின் தொடக்கத்தில் பெங்களூரு வந்தார். அவருக்கு குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் இருந்ததை அடுத்து அவரது ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த பரிசோதனை முடிவு வந்துள்ளது. அதில் அவருக்கு சின்னம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

இவ்வாறு சுதாகர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story