அரசு பள்ளிக்கூட கழிவறையை சுத்தம் செய்த ஆசிரியர்-சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்


அரசு பள்ளிக்கூட கழிவறையை சுத்தம் செய்த ஆசிரியர்-சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்
x

சிக்பள்ளாப்பூரில் அரசு பள்ளிக்கூட கழிவறையை சுத்தம் செய்த ஆசிரியர் சமூக வலைத்தளத்தில் வீடியோ வைரலாகியுள்ளது.

கோலார் தங்கவயல்:

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் குடிபண்டே தாலுகா சேலூரு கிராமத்தில் அரசு பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால், மர்மநபர்கள் அந்த பள்ளி கழிவறையின் கதவை உடைத்து நாசப்படுத்தியிருந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளிகள் மீண்டும் தொடங்கியது. ஆனால் மாணவ-மாணவிகளால், பள்ளியின் கழிவறையை பயன்படுத்த முடியாத அளவுக்கு அசுத்தமாக கிடந்தது. அத்துடன் பயங்கர துர்நாற்றமும் வீசியது. இதனால் மாணவ-மாணவிகள் அந்த கழிவறைகளை பயன்படுத்தாமல் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் அந்த பள்ளியின் ஆசிரியர் கிருஷ்ணா ரெட்டி, தாமாக முன்வந்து பள்ளிக்கூட கழிவறைகளை சுத்தம் செய்ய முன்வந்தார். அதன்படி அவர் குழாய் மூலம் தண்ணீர் அடித்து துடைப்பானை கையில் பிடித்து கழிவறைகளை சுத்தம் செய்தார். பள்ளி மாணவ-மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்ய வைக்கும் ஆசிரியர்கள் மத்தியில், கிருஷ்ணா ரெட்டியின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும் அவர் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

1 More update

Next Story