காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு


காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு
x

பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.40 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு:-

தலா ரூ.40 கோடி

பெங்களூருவில் மொத்தம் 28 தொகுதிகள் உள்ளன. இதில் 16 தொகுதிகளில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களும், 11 தொகுதிகளில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். ஒரு தொகுதி அதாவது ஆனேக்கல் பெங்களூரு நகர மாவட்டத்தில் வருகிறது. இந்த நிலையில் பெங்களூரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டிற்காக கர்நாடக அரசு தலா ரூ.40 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

அதாவது காங்கிரஸ்

எம்.எல்.ஏ.க்கள் பைரதி சுரேஷ், என்.ஏ.ஹாரீஷ், ஜமீர்அகமதுகான், ராமலிங்கரெட்டி, கிருஷ்ண பைரேகவுடா, கே.ஜே.ஜார்ஜ், ரிஸ்வான் ஹர்ஷத், ஏ.சி.சீனிவாஸ், தினேஷ் குண்டுராவ், பிரியா கிருஷ்ணா, எம்.கிருஷ்ணப்பா ஆகியோருக்கு இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பா.ஜனதாவை சேர்ந்த எஸ்.டி.சோமசேகர் தொகுதிக்கும் ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் காங்கிரசில் சேர உள்ளதாக கூறப்படுகிறது. ஆனேக்கல் தொகுதிக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

சாலை மேம்பாட்டு பணிகள்

பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால் அவர்கள் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். பிராண்ட் பெங்களூருவை உருவாக்குவதாக கூறும் அரசு, காங்கிரஸ் தொகுதிகளுக்கு மட்டும் நிதி ஒதுக்கினால் அந்த இலக்கை அடைய முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் முக்கியமாக சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.


Next Story