பெங்களூரு - பங்காருபேட்டை சிறப்பு ரெயில் வாரத்தில் 7 நாட்களும் இயங்கும்


பெங்களூரு - பங்காருபேட்டை சிறப்பு ரெயில் வாரத்தில் 7 நாட்களும் இயங்கும்
x

பெங்களூரு - பங்காருபேட்டை சிறப்பு ரெயில் வாரத்தில் 7 நாட்களும் இயங்கும் என்று தென்மேற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

பெங்களூரு:

தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கே.எஸ்.ஆர். பெங்களூரு-பங்காருபேட்டை இடையே முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரெயில்கள்(வண்டி எண் 06389/06390), பங்காருபேட்டை-கே.எஸ்.ஆர். பெங்களூரு முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரெயில்கள் (வண்டி எண் 01769/01770) ஆகியவை வாரத்தில் 6 நாட்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தன.

பயணிகளின் வசதிக்காக இந்த சிறப்பு விரைவு ரெயில்கள் வாரத்தில் 7 நாட்களும் இயக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் மேற்கண்ட ரெயில்கள் வருகிற 7-ந் தேதி முதல் வாரத்தில் 7 நாட்களும் இயங்கும்.


Next Story