பள்ளி மாணவர்களுக்கு ஷூ மற்றும் சாக்ஸ் வழங்க காங்கிரஸ் பிச்சை எடுக்கவும் தயார்; டி.கே.சிவக்குமார் பேட்டி


பள்ளி மாணவர்களுக்கு ஷூ மற்றும் சாக்ஸ் வழங்க காங்கிரஸ் பிச்சை எடுக்கவும் தயார்; டி.கே.சிவக்குமார் பேட்டி
x

பள்ளி மாணவர்களுக்கு ஷூ மற்றும் சாக்ஸ் வழங்க தேவையான நிதிக்காக காங்கிரஸ் கட்சி பிச்சை எடுக்கவும் தயாராக இருப்பதாக மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

பெங்களூருவில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

40 சதவீத கமிஷன் பெறுவதில்...

கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததில் இருந்து மக்களை திசை திரும்பும் வேலைகளில் மட்டுமே ஈடுபட்டு வருகிறது. பாடநூல் விவகாரத்தை கொண்டு வந்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் ஷூ மற்றும் சாக்ஸ்கள் வழங்கப்படாமல் உள்ளது. மாணவர்களுக்கு ஷூ மற்றும் சாக்ஸ் வழங்குவதற்காக அரசிடம் பணம் இல்லை என்று கூறி வருகிறது. பள்ளி மாணவ, மாணவிகள் விவகாரத்தில் அரசு அலட்சியமாக இருந்து வருகிறது.

40 சதவீதம் கமிஷன் பெறுவதில் மட்டுமே அரசும், மந்திரிகளும் கவனம் செலுத்தி வருகிறார்கள். அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஷூ மற்றும் சாக்ஸ் வழங்க அரசிடம் பணம் இல்லை என்று பள்ளி கல்வித்துறை மந்திரி பொறுப்பில்லாமல் பதில் சொல்லி வருகிறார்.

பிச்சை எடுக்க தயார்

பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வி விவகாரத்தில் மந்திரி பி.சி.நாகேஸ் கூறி வரும் ஒவ்வொரு கருத்துகளையும் காங்கிரஸ் கட்சி கடுமையாக கண்டிக்கிறது. மாணவர்களுக்கு ஷூ மற்றும் சாக்ஸ் வழங்குவதற்கு தேவையான நிதியை திரட்டுவதற்காக காங்கிரஸ் கட்சி பிச்சை எடுக்கவும் தயாராக உள்ளது.இதற்காக காங்கிரஸ் தொண்டர்கள் தெரு, தெருவாக செல்லவும் தயாராக உள்ளனர்.அரசு தங்களால் முடியாது என்று கூறி விட்டால், காங்கிரஸ் கட்சி மாநில மக்களிடம் பிச்சை எடுத்து, அந்த பணத்தில் மாணவ, மாணவிகளுக்கு ஷூ மற்றும் சாக்ஸ் வாங்கி கொடுக்க தயாராக உள்ளது.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

1 More update

Next Story