தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள்

சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள்

பெங்களூரு காந்திநகர் 2-வது மெயின் ரோட்டில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளி முன்பு செல்லும் சாலையோரம் குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கிறது. இதனை அகற்ற மாநகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுப்பது இல்லை என்று கூறப்படுகிறது. குப்பை கழிவுகள் குவிந்து கிடப்பதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். அந்த குப்பை கழிவுகளை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- தினேஷ், காந்திநகர், பெங்களூரு.

சாலையில் வைத்து பழுது பார்க்கப்படும் வாகனங்கள்

பெங்களூரு பனசங்கரி யாரப்நகரில் இருந்து கதிரேனஹள்ளிக்கு ஒரு சாலை செல்கிறது. அந்த சாலையின் இருபுறமும் ஏராளமான இருசக்கர வாகன பழுது நீக்க கடைகள் உள்ளது. வாகனங்களை பழுது நீக்க வருபவர்களின் வாகனங்களை சாலையில் நிறுத்தி வைத்து பழுது பார்க்கின்றனர். இதனால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கடைகள் முன்பும் வாகனங்களை நிறுத்தி வைத்து இருப்பதால் பாதசாரிகளால் நடைபாதையை பயன்படுத்த முடியவில்லை. மேற்கண்ட பிரச்சினைகளை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

- பிரசாத், பனசங்கரி, பெங்களுரு.

1 More update

Next Story