'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

நடைபாதையில் குவித்து வைக்கப்பட்டு இருக்கும் கட்டிட கழிவுகள்

சாலை நடுவே தோண்டப்பட்டு உள்ள பள்ளம்

பெங்களூரு பசவேஸ்வரா நகர் 3-வது கிராசில் பூமிக்கு அடியில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகளுக்காக சாலையின் நடுவே பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. இதனால் அந்த சாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் பக்கத்து சாலைகளின் வழியாக வாகன ஓட்டிகள் செல்கின்றனர். இதன்காரணமாக அந்த சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகளை விரைவில் முடித்து பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ரமேஷ், பசவேஸ்வரா நகர், பெங்களூரு.

நடைபாதையில் குவித்து வைக்கப்பட்டு இருக்கும் கட்டிட கழிவுகள்

பெங்களூரு தாசரஹள்ளி ரோடு கோத்தரேஜ் உட்ஸ்மேன் பகுதியில் பூமிக்கு அடியில் குழாய் பகுதிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் அங்கு பள்ளம் தோண்டி கட்டிட கழிவுகள் எடுக்கப்பட்டன. பின்னர் கட்டிட கழிவுகளை அப்பகுதியில் உள்ள நடைபாதையில் குவித்து வைத்து உள்ளனர். இதன்காரணமாக அந்த நடைபாதையை மக்கள் பயன்படுத்த முடிவது இல்லை. அந்த கட்டிட கழிவுகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- மஞ்சுநாத், தாசரஹள்ளி, பெங்களூரு

1 More update

Next Story