'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

சேறும், சகதியுமாக காட்சியளிக்கும் சாலை

சேறும், சகதியுமாக காட்சியளிக்கும் சாலை

பெங்களூரு சி.கே.பி. லே-அவுட் முன்னோகஹள்ளி பகுதியில் சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் அந்த சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் பொதுமக்கள் அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். மேலும் தேங்கி கிடக்கும் தண்ணீரில் கொசுகள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் நிலவுகிறது. இதனால் மாநகராட்சி அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரேவண்ணா, சி.கே.பி. லே-அவுட், பெங்களூரு.

ஆமை வேகத்தில் நடைபெறும் சாலை பணிகள்

பெங்களூரு பனசங்கரி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே சாலை சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. ஆமை வேகத்தில் நடந்து வரும் பணிகளால் அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் சாலையில் ஓரங்களில் நடந்து செல்லும்போது விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அசம்பாவித சம்பவங்கள் நடப்பதற்கு முன்பாக அந்த சாலையை மாநகராட்சி அதிகாரிகள் சீரமைக்க வேண்டும்.

-பரணி, பனசங்கரி, பெங்களூரு.


Next Story