லோகேஷ் ராகுல் 'உள்ளாடையில்' குத்துச்சண்டை வீரர் போல் உள்ளார்- நடிகை கஸ்தூரி விமர்சனம்


லோகேஷ் ராகுல் உள்ளாடையில் குத்துச்சண்டை வீரர் போல் உள்ளார்- நடிகை கஸ்தூரி விமர்சனம்
x

கிரிக்கெட் வீரர் லோகேஷ் ராகுலின் உடல் கட்டு குத்துச்சண்டை வீரர் போல் உள்ளது என்று தமிழ் நடிகை கஸ்தூரி விமர்சனம் செய்துள்ளார்.

பெங்களூரு;

தமிழ் மற்றும் கன்னட திரைஉலகில் பிரபல நடிகையாக இருந்தவர் கஸ்தூரி. திருமணத்துக்கு பின் அவர் திரைஉலகில் இருந்து ஒதுங்கி இருந்தார். தற்போது மீண்டும் அவர் திரைஉலகில் கால்பதித்துள்ளார். அவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பான கருத்துக்களை பதிவிடுவது வழக்கம். அதுபோல் தற்போது இந்திய கிரிக்கெட் வீரரும், கர்நாடகத்தைச் சேர்ந்தவருமான லோகேஷ் ராகுல் குறித்து ஒரு கருத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது லோகேஷ் ராகுல், உள்ளாடை விளம்பரம் ஒன்றில் நடித்து இருக்கிறார்.

அவர் கட்டுமஸ்தான உடலுடன் உள்ளாடையில் தோன்றும் விளம்பரத்தைப் பார்த்த நடிகை கஸ்தூரி, லோகேஷ் ராகுலின் புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு 'கிரிக்கெட் வீரர்கள் சிப்ஸ், குளிர்பானம், ஆன்லைன் விளையாட்டுகள் போன்ற விளம்பரங்களில் தோன்றுவார்கள், ஆனால் லோகேஷ் ராகுல் ஒருபடி மேலே போய் உள்ளாடை விளம்பரத்தில் தோன்றி இருக்கிறார். அவர் பார்ப்பதற்கு நன்றாக குத்துச்சண்டை வீரர் போல் இருக்கிறார். இனிமேல் அலமாரியில் உள்ள ஆண்மகன்களின் உள்ளாடைகள் வெளியே வரும்' என்று குறிப்பிட்டுள்ளார். நடிகை கஸ்தூரியின் இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story