வருமான வரி சோதனை குறித்து எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு உரிய பதிலளிப்பேன்; துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி


வருமான வரி சோதனை குறித்து எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு உரிய பதிலளிப்பேன்; துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 16 Oct 2023 6:45 PM GMT (Updated: 16 Oct 2023 6:45 PM GMT)

வருமான வரி சோதனை குறித்து எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு உரிய பதிலளிப்பேன் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

என் மீதான வழக்கு ஒன்றில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இந்த தடையை நீக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துள்ளது. நான் எங்கும் ஓடி போக மாட்டேன். இந்த மண்ணின் சட்டத்தை மதிக்கிறேன். யாருக்கு என்ன பதில் கூற வேண்டுமோ அந்த பதிலை கூறுவேன். வருமான வரி சோதனை பற்றி சிலர் அந்த அமைப்பின் ஏஜெண்டுகளை போல் பேசுகிறார்கள்.

அவர்களை போல் நான் பேச மாட்டேன். நான் பொறுப்பான பதவியில் உள்ளேன். எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு உரிய பதிலளிப்பேன். அதுவரை அனைவரும் பொறுமையாக இருக்க வேண்டும். பா.ஜனதாவினர் போராட்டம் நடத்த வேண்டும். அப்போது தான் அவர்களின் அனைத்து விதமான கொள்ளைகளும் தெரியவரும். அவர்களின் ஊழல்களை நாங்கள் பகிரங்கப்படுத்துவோம்.

கட்சியை பலப்படுத்துவது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே, கே.சி.வேணுகோபால் மற்றும் நான் ஆகியோர் விவாதித்துள்ளோம். நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக வேட்பாளர்களின் பட்டியலை வழங்குமாறு மந்திரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தோம். இந்த பணி சற்று தாமதமாகி இருக்கிறது. இந்த பணிகளை துரிதமாக மேற்கொள்ள உத்தரவிடப்படும்.

வாரிய தலைவர்கள் பதவி எம்.எல்.ஏ.க்கள் மட்டுமின்றி கட்சி நிர்வாகிகளுக்கும் வழங்கப்படும். கட்சி என்றால் அதில் அனைவரும் சேருகிறார்கள். நானும், முதல்-மந்திரியும் ஆலோசித்து வாரிய தலைவர்கள் நியமனம் பற்றி முடிவு செய்வோம்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.


Next Story