குட்டே பகுதியில், அரசு பள்ளி வளாகத்தில் கிணற்றின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது

குடகு குட்டே பகுதியில் அரசு பள்ளி வளாகத்தில் இருந்த கிணற்றின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
குடகு:
குடகு மாவட்டம் பொன்னம்பேட்டை குட்டா கிராமத்தில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதில் அந்த பகுதியில் சில சாலைகள் மற்றும் மேம்பாலங்களில் விரிசல் ஏற்பட்டது. மேலும் ஓரிரு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு, வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் குட்டா கிராமத்தில் உள்ள அரசு பள்ளி கிணற்றுப்பகுதியில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது.
இதனால் அந்த கிணற்றின் சுற்றுச்சுவர் இடிந்து கிணற்றுக்குள் விழுந்தது. இந்த அசம்பாவிதத்தின்போது அக்கம்பக்கத்தில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து பள்ளி நிா்வாகம், பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த அதிகாரிகள் கிணற்றுப்பகுதியை பார்வையிட்டனர். மேலும் பாதுகாப்பு கருதி அந்த பகுதியில் கயிறுகள் கட்டப்பட்டதுடன், அங்கு யாரும் செல்லக்கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.






