கர்நாடகத்தில், முதல்-மந்திரி உள்ளாரா என்ற சந்தேகம் உள்ளது- குமாரசாமி பேட்டி


கர்நாடகத்தில், முதல்-மந்திரி உள்ளாரா என்ற சந்தேகம் உள்ளது- குமாரசாமி பேட்டி
x

கர்நாடகத்தில் முதல்-மந்திரி உள்ளரா என்ற சந்தேகம் உள்ளது என்று குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார் .

ஹாசன்:

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, ஹாசனில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மாநிலத்தில் இந்துத்வா கொள்கையில் ஆர்வமுள்ளவரை முதல்-மந்திரியாக நியமித்தால் பா.ஜனதாவை காப்பாற்றி கொள்ளலாம் என்று சிந்தித்து வருகின்றனர். இந்த கொள்கையால், கர்நாடகத்தில் முதல்-மந்திரி இருக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் முரண்பாடுடன் பேசி வருகிறார். தெளிவான கருத்துகளை முன் வைப்பது இல்லை. முதல்-மந்திரி இல்லையென்றால் மக்களை காப்பாற்ற முடியாது என்பது போன்று பேசி வருகிறார். நான் ஏற்கனவே இது குறித்து விவாதம் நடந்த சட்டசபை கூட்டும்படி கூறினேன். இதுவரை எந்த பதிலும் இல்லை.

மந்திரி அஸ்வத் நாராயண், குமாரசாமி எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை, தேடவேண்டியிருப்பதாக கூறியிருக்கிறார். நான் எங்கு இருக்கிறேன். என்ன பேசுவேண்டுமென்று தீர்மானிப்பதற்கு அஸ்வத்நாராயண் யார்?. ஆனால் தற்போது மாநிலத்தில் முதல்-மந்திரி இருக்கிறாரா. எங்கே இருக்கிறார் என்று சொல்ல வேண்டும். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது சட்டசபை எப்படி இருந்தது. உங்கள் ஆட்சியில் சட்டசபை எப்படி நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story