மைசூருவில், மீட்பு படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் -மந்திரி எஸ்.டி.சோமசேகர் உத்தரவு


மைசூருவில், மீட்பு படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் -மந்திரி எஸ்.டி.சோமசேகர் உத்தரவு
x

பருவமழை பாதிப்புகளை தடுக்க மைசூருவில், மீட்பு படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று மந்திரி எஸ்.டி.சோமசேகர் உத்தரவிட்டுள்ளார்.

மைசூரு:

கர்நாடகத்தில் கடந்த மாதம் (ஜூன்) பருவமழை தொடங்கியது. தற்போது கடலோர மற்றும் மலைநாடு மாவட்டங்களில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மேலும் பெங்களூரு, மைசூரு, மண்டியா ஆகிய மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் பருவமழை பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மைசூரு மாவட்ட பொறுப்பு மந்திரி எஸ்.டி.சோமசேகர் பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் பருவமழை தீவிரமடைய தொடங்கி உள்ளது. மைசூருவில் கடந்த முறை ஏற்பட்ட மழை பாதிப்புகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. எனவே இந்தாண்டு மழை பாதிப்புகள் ஏற்படும் பகுதிகளை கண்காணித்து அந்த பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம் செய்வது, அவர்களுக்கு வேண்டிய உணவு போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக பருவமழை பாதிப்புகளை தடுக்க மீட்பு படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும். விவசாயிகள் தங்கள் விளைப்பயிர்களை பருவக்காலம் அறிந்து அறுவடை செய்வது நல்லது. விவசாயிகளுக்கு தேவையான உரம், விதை, விவசாய உபகரணங்கள் போன்றவை தட்டுப்பாடு இன்றி வழங்க நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story