சென்னராயப்பட்டணா அருகே நிலத்தகராறில்: வாலிபரை வெட்டிக் கொன்ற ரவுடி உள்பட 8 பேர் கைது


சென்னராயப்பட்டணா அருகே நிலத்தகராறில்:  வாலிபரை வெட்டிக் கொன்ற ரவுடி உள்பட 8 பேர் கைது
x

சென்னராயப்பட்டணா அருகே நிலத்தகராறில் வாலிபரை வெட்டிக் கொன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி உள்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஹாசன்:

நிலத்தகராறில் வாலிபர் கொலை

ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்ணா தாலுகா கமரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுதீப்(வயது 25). இதேபகுதியை சேர்ந்தவர் லிங்கராஜ். ரவுடி ஆவார். இவரது அண்ணன் மகன் சுதர்சன். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சுதர்சன் மற்றும் சுதீப்பின் தந்தைக்கு இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. இதில் சுதீப் தந்தையுடன் சேர்ந்து சுதர்சனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதன்காரணமாக முன்விேராதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுதர்சன் மற்றும் அவரது கூட்டாளிகள் சுதீப்பை கொலை செய்ய திட்டமிட்டனர்.

அதன்படி கடந்த 12-ந் தேதி இரேசாவே கிராமத்தில் உள்ள தோட்டத்தில் சுதீப் தனியாக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற லிங்கராஜ், சுதர்சன் உள்பட 8 பேர் கும்பல் சுதீப்பை பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கி கொன்றுவிட்டு தப்பியோடிவிட்டனர்.

8 பேர் கைது

இந்த கொலை குறித்து சென்னராயப்பட்டணா போலீசார் வழக்குப்பதிவு செய்து கொண்டனர். மேலும் 2 தனிப்படை அமைத்து 8 பேரையும் வலைவீசி தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று தனிப்படை போலீசார் கொலை வழக்கில் தொடர்புடைய 8 பேரையும் கைது செய்தனர். கைதான 8 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story