ஆயுஸ்மான் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அடையாள அட்டை-கலெக்டர் சீனிவாஸ் பேட்டி


ஆயுஸ்மான் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அடையாள அட்டை-கலெக்டர் சீனிவாஸ் பேட்டி
x

ஆயுஸ்மான் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என்று கலெக்டர் சீனிவாஸ் தெரிவித்துள்ளார்.

ஆனேக்கல்:

கிராம தங்கல் திட்டத்தின் கீழ் பெங்களூரு நகர கலெக்டர் சீனிவாஸ் நேற்று ஆனேக்கல் தாலுகா பாக்கியகடதேனஹள்ளி கிராமத்தில் தங்கி மக்களிடம் குறைகளை கேட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், கலெக்டர்கள் எல்லா நேரங்களிலும் பொதுமக்களுக்கு கிடைப்பதில்லை. பொதுமக்களின் அலையும் நேரங்களை குறைக்கவும், அரசின் செலவுகளை மிச்சப்படுத்தவும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் கிராமங்களை நோக்கி வந்து சேவை செய்கிறது. இது மக்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டம். ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ வசதிகள் கிடைக்கும். எனவே பொதுமக்கள் இந்த சலுகைகளை பயன்படுத்தி கொள்ளவேண்டும். மயானங்கள் தேவைப்படும் கிராமங்களில் அரசு சார்பில் மாயனங்கள் அமைத்து கொடுக்கப்படும். கிராம புறங்கள் வளர்ச்சி அடைய புதிய திட்டங்களை கொண்டு வருகிறோம். இந்த திட்டங்கள் பயனுள்ளதாக இருந்தால் மட்டுமே கிராம தங்கல் நிகழ்ச்சிக்கு பெயர் கிடைக்கும் என்றார்.


Next Story