கோமதேஸ்வரர் சிலை பாதுகாப்பு கல்சுவர் இடிந்து விழுந்தது: சுற்றுலா பயணிகளுக்கு தடை


கோமதேஸ்வரர் சிலை பாதுகாப்பு கல்சுவர் இடிந்து விழுந்தது: சுற்றுலா பயணிகளுக்கு தடை
x

கோமதேஸ்வரர் சிலை பாதுகாப்பு கல்சுவர் இடிந்து விழுந்ததால் சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஹாசன்:

ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா தாலுகா சரவணபெலகொலாவில் அமைந்துள்ளது வித்யாகிரி மலை. இந்த மலைப்பகுதியில் புகழ்பெற்ற கோமதேஸ்வரர் சிலை உள்ளது. இந்த சிலையை சுற்றி பாதுகாப்பிற்காக சுற்றுசுவர் எழுப்பப்பட்டுள்ளது. சுமார் 20 அடி உயரம் கொண்ட இந்த சுற்று சுவர் முழுவதும் கற்களால் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையில் சுற்றுசுவர் முழுவதும் சிதிலமடைந்து காணப்பட்டது.

இதனால் அந்த பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை திடீரென்று அந்த கல்சுவர் இடிந்து விழுந்தது. இதனால் மலைப்பகுதிக்கு செல்லும் பாதைகள் முழுவதும் கற்குவியலாக காணப்பட்டது. இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் பாலகிருஷ்ணா எம்.எல்.ஏ. விற்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்று அவர்கள் சுவர் இடிந்த இடத்தை பார்வையிட்டனர்.


Next Story