மண் பாதுகாப்பு குறித்து பள்ளி பாடத்திட்டத்தில் பாடம் சேர்க்கப்படும்; மந்திரி பி.சி.நாகேஸ் தகவல்


மண் பாதுகாப்பு குறித்து பள்ளி பாடத்திட்டத்தில் பாடம் சேர்க்கப்படும்; மந்திரி பி.சி.நாகேஸ் தகவல்
x

பெங்களூருவில் மண் பாதுகாப்பு குறித்து பள்ளி பாடத்திட்டத்தில் பாடம் சேர்க்கப்படும் என மந்திரி பி.சி.நாகேஸ் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

ஈஷா பவுண்டேசன் சார்பில் மண் பாதுகாப்பு குறித்த கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-

அதிகளவில் கிருமிநாசினி மருந்துகள் பயன்பாடு மற்றும் ரசாயன உரங்கள் பயன்படுத்துவதால் மண் வளம் பாதிக்கப்பட்டுள்ளது. நீர், நிலத்தை பாதுகாப்பது போல் மண்ணையும் காக்க வேண்டும். இது அனைவரின் கடமை ஆகும். மண் பாதுகாப்பு குறித்து குழந்தைகளுக்கு தெரிவிக்க வேண்டியது அவசியம். வரும் நாட்களில் பள்ளி பாடத்திட்டத்தில் மண் பாதுகாப்பு குறித்த பாடம் சேர்க்கப்படும். மண்ணின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு பி.சி.நாகேஸ் பேசினார்.

1 More update

Next Story