ஆனேக்கல் அருகே: மரசூரு, மாதிரி கிராம பஞ்சாயத்தாக தேர்வு


ஆனேக்கல் அருகே:  மரசூரு, மாதிரி கிராம பஞ்சாயத்தாக தேர்வு
x

ஆனேக்கல் அருகே மரசூரு, மாதிரி கிராம பஞ்சாயத்து தேர்வாகியிருப்பதாக பஞ்சாயத்து தலைவி சரிதா வெங்கடசாமி கூறியுள்ளார்.

ஆனேக்கல்:

பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா மரசூரு கிராம பஞ்சாயத்து சார்பாக நடந்த நல திட்ட உதவிகளை தொடங்கிய வைத்து பஞ்சாயத்து தலைவி சரிதா வெங்கடசாமி கூறியதாவது:- மரசூரு கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பண்டவபுராவில் கிராம பஞ்சாயத்து சார்பில் தகுதியான பயனாளிகளுக்கு பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டன. இந்த நல திட்டங்கள் பொதுமக்களுக்கு உதவியாக இருக்கிறது. வித்யா ஸ்ரீ திட்டம் மூலம் எஸ்.எஸ்.எல்.சி., பி.யூ.சி. மற்றும் பட்டப்படிப்பு படித்து வரும் மாணவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.

100 பெண்களுக்கு தையல் எந்திரம், மாற்று திறனாளிகளுக்கு தலா ரூ.1000 ஊக்கத்தொகை, கிராம பஞ்சாயத்தில் தூய்மையை பராமரிப்பதற்காக டிராக்டர்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி, அழகுக்கலை பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் பல பெண்கள் பயனடைந்துள்ளனர். அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளதால் மரசூரு, மாதிரி கிராம பஞ்சாயத்தாக தேர்வாகியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.


Next Story