பெங்களூருவில் மெட்ரோ ரெயில்களின் வேகம் அதிகரிப்பு-அதிகாரி தகவல்


பெங்களூருவில் மெட்ரோ ரெயில்களின் வேகம் அதிகரிப்பு-அதிகாரி தகவல்
x

பெங்களூருவில் உள்ள மெட்ரோ ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே போல ரெயில்கள் நிற்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு:

பெங்களூரு நகரில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. பையப்பனஹள்ளி-கெங்கேரி இடையே 25.6 கிலோ மீட்டர் தூரத்துக்கும், சில்க் போர்டு-நாகச்சந்திரா இடையே 30 கிலோ மீட்டருக்கும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெங்களூருவில் மெட்ரோ ரெயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், ரெயில் நிலையங்களில் ரெயில்கள் நிற்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் பெங்களூரு மெட்ரோ நிர்வாக இயக்குனர் (செயல்பாடு மற்றும் பராமரிப்பு) ஏ.எஸ்.சங்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், பெங்களூருவில் மெட்ரோ ரெயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் ரெயில் நிலையங்களில் நிற்கும் நேரமும் குறைக்கப்பட்டுள்ளது. கொரோனாவின்போது ரெயில் நிலையங்களில் 30-40 வினாடிகள் மெட்ரோ ரெயில்கள் நின்றன. தற்போது அது 20-30 வினாடிகளாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் பையப்பனஹள்ளி-கெங்கேரி இடையே வேகம் அதிகரிக்கப்பட்டு பயண நேரம் 52 நிமிடங்களில் இருந்து 47 நிமிடங்களாகவும், சில்க் போர்டு-நாகசந்திரா இடையே பயண நேரம் 55 நிமிடங்களில் இருந்து 54 நிமிடங்களாகவும் குறைக்கப்பட்டுள்ளது என்றார்.


Next Story