முனிசாமி எம்.பி. மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன்-நாராயணசாமி எம்.எல்.ஏ. பேட்டி


முனிசாமி எம்.பி. மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன்-நாராயணசாமி எம்.எல்.ஏ. பேட்டி
x

சட்டவிரோதமாக சொத்து சேர்த்தாக குற்றம் சாட்டியதால் முனிசாமி எம்.பி மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன் என்று நாாயணசாமி எம்.எல்.ஏ மிரட்டல் விடுத்துள்ளார்.

கோலார் தங்கவயல்:

கோலார் மாவட்டம் பங்காருபேட்டை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. நாராயணசாமி, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

முனிசாமி எம்.பி. வெற்றி பெற்றது முதல் இதுவரை தொகுதி நிதியில் இருந்து மாவட்டத்தில் எந்த ஒரு வளர்ச்சி பணியும் செய்யவில்லை. வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்தாமல் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களை குற்றம்சாட்டுவதையே குறிக்கோளாக கொண்டுள்ளார். நான், சட்டவிேராதமாக சொத்து சேர்த்துள்ளதாக எம்.பி. முனிசாமி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார்.

மேலும் எம்.எல்.ஏ. பதவியை பயன்படுத்தி விவசாயிகளை ஏமாற்றி அவர்களது நிலத்தை கையகப்படுத்தியதாகவும் கூறி வருகிறார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், மக்கள் மத்தியில் தனக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் என் மீது முனிசாமி எம்.பி. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். இதனால் அவர் மீது மானநஷ்ட வழக்குதொடர முடிவு செய்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story