கோலார் டவுனில் ரூ.4 கோடி அரசு நிலம் மீட்பு: அதிகாரிகள் நடவடிக்கை


கோலார் டவுனில் ரூ.4 கோடி அரசு நிலம் மீட்பு:  அதிகாரிகள் நடவடிக்கை
x

கோலார் டவுனில் ரூ.4 கோடி அரசு நிலங்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

கோலார் தங்கவயல்:

கோலார் டவுனில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுபற்றி மாவட்ட பொறுப்பு மந்திரி முனிரத்னாவிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அவர் இதுபற்றி விசாரணை நடத்தும்படி மாவட்ட கலெக்டர் வெங்கடராஜாவுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் நகரசபை கமிஷனருடன் ஆலோசனை நடத்திய கலெக்டர் வெங்கடராஜா, இதுபற்றி விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டார். இதற்கிடையே அரசு நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக 3 கவுன்சிலர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் நேற்று நகரசபை கமிஷனர் பவன்குமார் மற்றும் அதிகாரிகள் கோலார் நகரசபை வார்டு எண் 16-ல் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த அரசு நிலத்தை மீட்டனர். அந்த நிலத்தின் மதிப்பு ரூ.4 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து அரசு நிலத்தை மீட்கும் பணி தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story