ராபர்ட்சன்பேட்டையில் சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனங்கள் அகற்றம்


ராபர்ட்சன்பேட்டையில் சாலையோரம் நிறுத்தப்பட்ட  வாகனங்கள் அகற்றம்
x
தினத்தந்தி 12 Oct 2023 12:15 AM IST (Updated: 12 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியை தொடர்ந்து ராபர்ட்சன்பேட்டையில் சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனங்கள் அகற்றப்பட்டது. இதையடுத்து வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ராபர்ட்சன்பேட்டை

சாலையோரம் வாகனங்கள் நிறுத்தம்

கோலார் தங்கவயலை அடுத்த ராபர்ட்சன்பேட்டை மற்றும் ஆண்டர்சன்பேட்டை பகுதி எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். மேலும் இங்கு வாகனங்கள் நடமாட்டமும் அதிகரித்து காணப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக ராபர்ட்சன்பேட்டையில் உள்ள சுராஜ்மல் சர்க்கிளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்பட்டது.

இந்த போக்குவரத்து நெரிசலுக்கு ராபர்ட்சன்பேட்டையில் இருந்து சுராஜ்மல் சதுக்கம் வரை சாலைகளில் இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத்துவதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.

'தினத்தந்தி' செய்தி எதிரொலி

இதனால் சுராஜ்மல் சர்க்கிள் பகுதியில் விபத்துகள் ஏற்படும் அபாயம் நிலவியது. எனவே வாகன ஓட்டிகள் ராபர்ட்சன்ேபட்டை மற்றும் சுராஜ்மல் சர்க்கிளை சுற்றி உள்ள பகுதிகளில் சாலைகளின் இருபுறங்களிலும் நிறுத்தப்படும் வாகனங்களை அகற்றவேண்டும் என்று போலீசாருக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராபர்ட்சன்பேட்டை, சுராஜ்மல் சர்க்கிள் பகுதியில் சாலைகளில் வாகன போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று 'தினத்தந்தி'யில் செய்திகள் வெளியானது.

போலீசார் நடவடிக்கை

இந்த தகவல் ராபர்ட்சன்பேட்ைட போலீசாரின் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து நேற்று ராபர்ட்சன்ேபட்டை சுராஜ்மல் சர்க்கிள் பகுதிக்கு சென்ற போலீசார் சாலைகளில் இருபுறங்களிலும் நிறுத்தப்பட்ட வாகனங்களை அங்கிருந்து அகற்றினர்.

மேலும் அந்த சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய போலீசாரும் நியமிக்கப்பட்டனர்.

1 More update

Next Story