சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்; மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைப்பு
சந்தன மரங்கள் வெட்டி கடத்திய வழக்கில் தலைமறைவானவர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
பெங்களூரு:
பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டை தாலுகா கோடியூபுரா கிராமத்தில கர்நாடக அரசின் வனத்துறைக்கு சொந்தமான வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் 1,500 சந்தன மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வனப்பகுதிக்குள் புகுந்த மர்மநபர்கள் 25 சந்தன மரங்களை வெட்டி கடத்தி சென்று விட்டனர்.
இதுபற்றி வனத்துறையினர் ஒசக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் மர்மநபர்களை பிடிக்க பெங்களூரு புறநகர் போலீஸ் சூப்பிரண்டு வம்சி கிருஷ்ணா உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. சந்தன மரத்தை வெட்டி கடத்தியதில் பெரிய கும்பல் ஈடுபட்டு இருக்கலாம் என்று வனத்துறை அதிகாரி ஒருவரும் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story