சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் கைதாகி உள்ள அம்ருத் பாலின் ஜாமீன் மனு மீது நாளை விசாரணை


சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் கைதாகி உள்ள  அம்ருத் பாலின் ஜாமீன் மனு மீது நாளை விசாரணை
x

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் கைதாகி உள்ள அம்ருத் பாலின் ஜாமீன் மனு மீது நாளை விசாரணை நடைபெறவுள்ளது.

பெங்களூரு:

கர்நாடகத்தில் 545 சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கு நடந்த தேர்வில் முறைகேடு நடந்திருப்பது குறித்து விசாரணை நடத்தி வரும், சி.ஐ.டி. போலீசார், கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அம்ருத் பாலை கைது செய்துள்ளனர். தற்போது அவர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி அம்ருத் பால் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை, பெங்களூரு 1-வது கூடுதல் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி ஆனந்த் சவுகான் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

நேற்று முன்தினம் நடைபெற்ற விசாரணையின் போது, ஜாமீன் மனு மீது ஆட்சேபனை தெரிவிக்கவும், உண்மை கண்டறியும் சோதனை நடத்துவது குறித்தும் தெரிவிக்க காலஅவகாசம் வழங்கும்படி சி.ஐ.டி. போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீல் வாதிட்டார்.

அதே நேரத்தில் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவது குறித்து விவாதிக்க வேண்டும் என்று அம்ருத் பால் தரப்பில் ஆஜரான வக்கீல் கேட்டுக் கொண்டார். இதையடுத்து, அம்ருத் பாலின் ஜாமீன் மனு மீதான விசாரணையை 19-ந் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். அதன்படி, கூடுதல் டி.ஜி.பி. அம்ருத் பாலின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.


Next Story