கொல்ல முயற்சி வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை


கொல்ல முயற்சி வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
x

மடிகேரியில் ஓட்டல் உரிமையாளர், ஊழியரை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்ற வழக்கில் கைதான வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை நீதிபதி தீர்ப்பளித்தார்.

குடகு:-

துப்பாக்கியால் சுட்டு...

குடகு மாவட்டம் மடிகேரி தாலுகா ஹில் ரோடு பகுதியை சேர்ந்தவர் ரியாஸ். இவர் அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலில் வேலை பார்த்து வருபவர் ஷமீம் அன்சாரி. கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த லோகேஷ், அக்ரம் ஆகிய 2 பேர் சாப்பிடுவதற்காக வந்தனர். அப்போது அக்ரம் சிக்கன் வாங்கி சாப்பிட்டுவிட்டு, பின்னர் கோபி மஞ்சூரி கேட்டுள்ளார். அதற்கு அக்ரம் ஏற்கனவே கடன் அதிகளவு இருக்கிறது. கோபி மஞ்சூரி தர முடியாது என்று கூறியுள்ளார். இதை கேட்ட அக்ரம், லோகேசிடம் இதுகுறித்து கூறினார். அப்போது லோகேஷ் கோபமடைந்து கையில் வைத்திருந்த துப்பாக்கியால் அக்ரமை நோக்கி சுட்டார். இதை பார்த்த ரியாஸ் ஓடி வந்து தடுக்க முயன்றார். அப்போது ரியாஸ் மீதும் அவர் துப்பாக்கியால் சுட்டார். 3 முறை சுட்டதாக கூறப்படுகிறது. ரியாஸ் மற்றும் அக்ரமிற்கு பலத்த காயம் ஏற்பட்டது.

10 ஆண்டு சிறை தண்டனை

சம்பவ இடத்தில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற2 பேரும் பின்னர் வீடு திரும்பினர். இந்த சம்பவம் குறித்து ரியாஸ் மடிகேரி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் லோகேஷ், அக்ரமை கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு விசாரணை குடகு மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. இந்தநிலையில் நேற்று விசாரணை முடிந்து நீதிபதி ஷியாம் பிரசாத் தீர்ப்பு வழங்கினார். அப்போது குற்றம் சாட்டப்பட்ட லோகேசிற்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் அக்ரம் மீதான குற்றச்சாட்டிற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்பதால், அவரை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அக்ரமை விடுதலை செய்தனர். லோகேசை சிைறயில் அடைத்தனர்.


Next Story