ஏரிக்குள் கார் பாய்ந்தது; வாலிபர் பரிதாப சாவு


ஏரிக்குள் கார் பாய்ந்தது;  வாலிபர் பரிதாப சாவு
x

பெங்களூருவில் ஏரிக்குள் கார் பாய்ந்ததில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பெங்களூரு:

பெங்களூரு சுங்கதகட்டே பகுதியை சேர்ந்தவர் பிரஜ்வல் (வயது 22). இவரது நண்பர் ரவிசந்திரா. இவர்கள் 2 பேரும் வெளியே சென்று விட்டு காரில் வீட்டுக்கு புறப்பட்டனர். பெங்களூரு அருகே தாவரகெரே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தேவர மாச்சோஹள்ளி அருகே வரும் போது, பிரஜ்வலின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த ஏரிக்குள் பாய்ந்தது.

இதில், ஏரியில் மூழ்கி பிரஜ்வல் பலியானார். அவரது நண்பர் ரவிசந்திரா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பிரஜ்வல் காரை அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டியே விபத்திற்கு காரணம்என போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தாவரகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story