திரிபுர சுந்தரி அம்மன் கோவில் ராஜகோபுர கலச பூஜை:மந்திரி எஸ்.டி.சோமசேகர் பங்கேற்றார்


திரிபுர சுந்தரி அம்மன் கோவில் ராஜகோபுர கலச பூஜை:மந்திரி எஸ்.டி.சோமசேகர் பங்கேற்றார்
x

டி.நரசிப்புரா அருகே மூகூருவில் திரிபுர சுந்தரி அம்மன் கோவில் ராஜகோபுர கலச பூஜையில் மந்திரி எஸ்.டி சோமசேகர் பங்கேற்றார்.

மைசூரு:

மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா தாலுகா மூகூரு கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரிபுர சுந்தரி அம்மன் கோவில் உள்ளது. பழைமை வாய்ந்த இந்த கோவிலை அரசு நிர்வகித்து வருகிறது. கோவில், ராஜகோபுரம் புனரமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று ராஜகோபுர கலச பூஜை நேற்று நடந்தது. இதில் கூட்டுறவுத்துறை மந்திரியும், மைசூரு மாவட்ட பொறுப்பு மந்திரியுமான எஸ்.டிசோமசேகர் கலந்து கொண்டார். மேலும் கலெக்டர் பகாதி கவுதம், டி.நரசிப்புரா தொகுதி எம்.எல்.ஏ. அஸ்வின்குமார், மண்டியா தொகுதி எம்.எல்.ஏ. புட்ட ராஜு, கொள்ளேகால் தொகுதி எம்.எல்.ஏ. என்.மகேஷ் கலந்துகொண்டனர்.

இதில் திரிபுர சுந்தரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைதொடர்ந்து மந்திரி எஸ்.டி.சோமசேகர், புனரமைக்கப்பட்ட ராஜகோபுரத்தை திறந்து வைத்தார். பின்னர் கோவில் வளாகத்தில் 5 கோடி ரூபாய் செலவில் தூர்வாரப்பட்ட தெப்பகுளத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார். ரூ.2 கோடி செலவில் புதிதாக வடிவமைக்கப்பட்ட பெரிய தேரை திறந்து வைத்து கோவிலுக்கு சமர்பித்தார். மேலும் ரூ.7.5 கோடி செலவில் பக்தர்கள் தங்கும் விடுதிக்கு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

1 More update

Next Story