பெட்ரோல் நிரப்பிவிட்டு தப்பி சென்ற 2 பேர் சிக்கினர்

பெங்களூருவில் பெட்ரோல் நிரப்பிவிட்டு தப்பி சென்ற 2 பேர் சிக்கினர்.
பெங்களூரு:
பெங்களூரு பேடராயனபுராவில் ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது. கடந்த 2-ந் தேதி நள்ளிரவில் அங்குவந்த 2 பேர், மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் நிரப்பினார்கள். அதற்கு உரிய பணத்தை கொடுக்காமலும், பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரை ஆயுதங்களை மிரட்டி விட்டும் 2 பேரும் சென்று விட்டனர்.
இதுகுறித்து பேடராயனபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 நபர்களையும் தேடிவந்தனர். இந்த நிலையில், போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் உதய் மற்றும் கிரண் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





