Normal
குடிநீர் தொட்டியில் குதித்து தொழிலாளி தற்கொலை

குடிநீர் தொட்டியில் குதித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.
பெங்களூரு:
பெங்களூரு கோவிந்தராஜ் நகர் பகுதியில் வசித்து வந்தவர் வேணுகோபால் (வயது 45). தொழிலாளி. இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே வேணுகோபாலை அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் வேணுகோபால் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் முன்பு இருந்த தரைமட்ட குடிநீர் தொட்டியில் குதித்து வேணுகோபால் தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி அறிந்ததும் அங்கு வந்த கோவிந்தராஜ்நகர் போலீசார் வேணுகோபாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வேணுகோபாலின் தாயும், சகோதரியும் குடிநீர் தொட்டியில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






