எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணிகளிடம் திருடிய 2 பேர் பிடிபட்டனர்; ரூ.4 லட்சம் பறிமுதல்
எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகளிடம் திருடி வந்த 2 பேர் பிடிபட்டனர். ரூ.4 லட்சத்து 14 ஆயிரம் மதிப்புள்ள நகை உள்ளிட்ட பொருட்களை போலீசார் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர்.
தானே,
எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகளிடம் திருடி வந்த 2 பேர் பிடிபட்டனர். ரூ.4 லட்சத்து 14 ஆயிரம் மதிப்புள்ள நகை உள்ளிட்ட பொருட்களை போலீசார் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர்.
திருட்டு
மத்திய ரெயில்வே வழித்தடத்தில் கல்யாணில் கடந்த மே மாதம் ஓடும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணிகளின் உடைமைகள் திருட்டு போனதாக ரெயில்வே போலீசாருக்கு புகார்கள் வந்தன. இந்த புகாரின் படி போலீசார் திருட்டு கும்பலை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் 2 பேரின் அடையாளம் தெரியவந்தது. சுமார் 35 வயதுடைய அவர்களின் பெயர் தினேஷ் கண்பத், சந்தோஷ் சவுத்ரி என தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
பறிமுதல்
கைதான ஆசாமிகளிடம் இருந்து 51 கிராம் தங்கம், 5 செல்போன்கள் என மொத்தம் ரூ.4 லட்சத்து 14 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர். இவர்களுக்கு மேலும் 5 வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து திருட்டு கும்பலில் தொடர்புடைய மற்ற நபர்களை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.