மாற்றுத்திறனாளி ரெயில் பெட்டியில் பயணித்த 276 பேர் பிடிபட்டனர்; கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்

மாற்றுத்திறனாளி ரெயில் பெட்டியில் பயணித்த 276 பேர் பிடிபட்டனர்; கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்
x

மாற்றுத்திறனாளி ரெயில் பெட்டியில் விதிமுறையை மீறி பயணம் செய்த 276 பேர் பிடிபட்டனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி அபராதம் விதிக்கப்பட்டது.

மும்பை,

மாற்றுத்திறனாளி ரெயில் பெட்டியில் விதிமுறையை மீறி பயணம் செய்த 276 பேர் பிடிபட்டனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி அபராதம் விதிக்கப்பட்டது.

276 பேர் பிடிபட்டனர்

மும்பை மத்திய ரெயில்வே வழித்தடத்தில் செல்லும் மின்சார ரெயில்களில் மாற்றுத்திறனாளிகள் பெட்டியில் சாதாரண பயணிகள் பயணம் செய்து தொல்லை தருவதாக ரெயில்வே போலீசாருக்கு புகார் வந்தது. இந்த புகாரின் படி போலீசார் நேற்று முன்தினம் தானே, டோம்பிவிலி, கல்யாண், பத்லாப்பூர் ரெயில் நிலையத்தில் சோதனை போட்டனர். இந்த சோதனையில் மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் சட்டவிரோதமாக பயணம் செய்த மொத்தம் 276 பேர் பிடிபட்டனர்.

கோர்ட்டில் ஆஜர்

இது பற்றி ரெயில்வே சீனியர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "மாற்றுத்திறனாளி பெட்டிகளில் சட்டவிரோதமாக பயணம் செய்ததாக தானேயில் 72 பேரும், டோம்பிவிலியில் 67 பேரும், கல்யாணியில் 80 பேரும், பத்லாப்பூரில் 57 பேரும் பிடிபட்டு உள்ளனர். இவர்கள் இரவு நேர கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். கோர்ட்டில் அவர்கள் உண்மையை ஒப்புக்கொண்டதால் அவர்களுக்கு அபராதம் விதித்து நீதிபதி விடுவித்தார். இதுபோன்று மீண்டும் பயணம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர்களை நீதிபதி எச்சரித்தார். எங்களது இந்த சோதனை தொடரும். மாற்றுத்திறனாளி பயணிகளை சிரமத்தில் இருந்து விடுவிப்பதே எங்களின் நோக்கம்" என்றார்.

Next Story