கணபதி மண்டலுக்கு ரூ.25 ஆயிரம் நன்கொடை கேட்டு வியாபாரியை தாக்கிய 3 பேர் கைது


கணபதி மண்டலுக்கு ரூ.25 ஆயிரம் நன்கொடை கேட்டு வியாபாரியை தாக்கிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 13 Sept 2023 12:45 AM IST (Updated: 13 Sept 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

கணபதி மண்டலுக்கு ரூ.25 ஆயிரம் நன்கொடை கேட்டு வியாபாரியை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

கணபதி மண்டலுக்கு ரூ.25 ஆயிரம் நன்கொடை கேட்டு வியாபாரியை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நன்கொடை கேட்டு மிரட்டல்

மும்பை சாக்கிநாக்கா கைரானி சாலையை சேர்ந்தவர் சவுத்ரி. வியாபாரி. இவரிடம் கடந்த 4-ந்தேதி அதே பகுதியை சேர்ந்த சிலர் கணபதி மண்டல் அமைப்பதற்கு ரூ.25 ஆயிரம் நன்கொடை தருமாறு கேட்டு உள்ளனர். இதற்கு வியாபாரி சவுத்ரி மறுத்து உள்ளார். ஆனால் கணபதி மண்டல்களை சேர்ந்த 3 பேர் தினசரி அவரிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்தனர். இதனால் ரூ.5 ஆயிரம் தருவதாக சவுத்ரி ஒப்புக்கொண்டார். கடந்த 9-ந்தேதி இரவு 10.45 மணி அளவில் அவரது கடைக்கு வந்த 3 பேர் கூடுதலாக பணம் தருமாறு கேட்டு மிரட்டினர்.

தாக்குதல்

இதற்கு மீண்டும் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து அவரை தாக்கினர். பின்னர் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இது பற்றி அவர் சாக்கிநாக்கா போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கொலை மிரட்டல் விடுத்த 3 பேரின் அடையாளம் தெரியவந்தது. அவர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story